கனடாவின் டொரண்டோவில் சரிவடைந்த வீடுகளின் விலைகள்..!

கனடாவில் உள்ள மிகப்பெரிய நகரம் டொரண்டோ. வளர்ச்சியின் அடிப்படையிலும், மக்கள் தொகை சதவீதத்திலும் இந்த நகரம் முதன்மையானதாக இருக்கிறது.

டொரண்டோவில் வீட்டின் விலைகள் சரிவடைந்து காணப்படுகிறது. அதன்படி கடந்த மாதமான நவம்பரில் டொராண்டோ வீட்டு விலை வீழ்ச்சியானது, 2022 உச்சத்திலிருந்ததை விட கிட்டத்தட்ட 19% குறைந்துள்ளது.



இது குறித்த தரவுகளை டொராண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் வாரியம் (TRREB) வெளியிட்டுள்ளது.

TRREB தலைவர் பால் பரோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து மாதங்களில் நான்காவது முறை வீடுகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதத்தில் 2.2% அளவில் சரிந்தது. கடந்த பிப்ரவரி 2022 உச்சத்திலிருந்து 18.9% வரை மொத்தமாக குறைந்துள்ளது.



பணவீக்கம் மற்றும் கடன் வாங்கும் செலவுகள் ஆகியவை கட்டுப்படியாகக்கூடிய விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். அதே சமயம்கடந்த நவம்பர் மாதத்தில் வீடுகளின் விற்பனையானது 1.7% உயர்ந்துள்ளது,



இருப்பினும், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையானது 6% என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.