இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனேடிய பிரஜை; வலைவீசி தேடும் இன்டர்போல்..!

குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனடிய பிரஜை ஒருவரை கண்டு பிடிக்க இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையிடம் கனேடிய காவல்துறையினர் உதவி கோரியுள்ளனர்.

80 கிலோ கிராம் எடையுடைய ஹொக்கைன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்திய குற்றசாட்டு சுமத்தப்பட்டவர் ஒருவரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.குறித்த சந்தேக நபருக்கு கனடிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதால் கனேடிய காவல்துறையினர் சர்வதேச காவல் துறையினரின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர்.பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த சுமார் 60 வயதான ராஜ் குமார் மெஹ்மி என்ற நபரே இவ்வாறு தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.