கனடாவில் கண்டறியப்பட்ட கொடிய நோய்க் கிருமி; இதுவரை ஆறு பேர் பலி..!

கனடாவில் கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் கொடிய நோய்க்கிருமியொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பழங்களை உட்கொண்டமையினால் இதுவரையும் ஆறு பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில், அந்த பழங்களை உட்கொள்ள வேண்டாம் என கனேடிய பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளனர்.

இந்த நோய்க்கிருமியால் 153 பேர் வரை பாதிக்கப்படைந்துள்ளதுடன் அவர்களில் 53 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பொதுவாக இந்த சால்மோனெல்லா கிருமி, கோழி இறைச்சியுடன் தொடர்புடையதாகவும் சரியாக வேகவைக்கப்படாத கோழி இறைச்சியை உண்பவர்களுக்கு இந்த கிருமி பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்தோடு கனடா உணவு பாதுகாப்பு நிறுவனங்கள், Malichita மற்றும் Rudy என்னும் நிறுவனத் தயாரிப்புகளில் இந்த பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளதுடன் இந்த நிறுவன தாயரிப்புக்களை மக்களை உண்ண வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.



ஒக்டோபர் 11ஆம் திகதிக்கும் நவம்பர் 14ஆம் திகதிக்கும் இடையில் விற்கப்பட்ட Malichita நிறுவன பழங்களிலும், ஒக்டோபர் 10ஆம் திகதிக்கும் நவம்பர் 24ஆம் திகதிக்கும் இடையில் விற்கப்பட்ட Rudy நிறுவன பழங்களிலும் பாதிப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.