யாழில் வாள் வெட்டுக் குழுவினரை துரத்திப் பிடித்த பொலிசார்; ஒருவர் வாளுடன் கைது..!

யாழில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த இளைஞன் ஒருவர் வாள் ஒன்றுடன், நேற்றைய தினம் சனிக் கிழமை சாவகச்சேரி பொலிஸாரினால் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டு கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தகவலின் பிராகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாராரை கண்டதும் வாள் வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் , சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மற்றைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.