ஐந்து சிறுமிகள் துஸ்பிரயோகம்; பாதிரியார் பொலிசாரால் கைது..!

கிருலப்பனை பிரதேசத்தில் மத சபை ஒன்றினால் நடத்தப்படும் விடுதியொன்றில் ஐந்து சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த விடுதி, பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 63 வயதான பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 5 சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்புவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிருலப்பனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.