காரைநகர் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது; நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மீனவர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



மேலும் இந்திய மீனவர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.