வடக்கு மாகாண மக்களே அவதானம்; டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு..!

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (24-12-2023) மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான 2 விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.