அரச பேருந்துகளின் இணைய ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான தகவல்..!

அரச பேருந்துகளின் ஆசனங்களை இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்யும் சேவை மிகவும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒரு மாதத்தில் எழுபத்தி ஏழாயிரம் பேர் இந்த சேவையைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அத்துடன், இச்சேவை மூலம் ஒரு வருடத்தில் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

இலங்கை போக்குவரத்துச் சபையின் 5300 பேரூந்துகள் தற்போது இயங்கி வருவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் ஐயாயிரத்து முன்னூறு பேருந்துகள் இயக்கப்படும்.

அதேவேளை, எண்ணூறு நடத்துனர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளனர்.



பேருந்துகளுக்கான ஆசன முன்பதிவுகள் டிப்போக்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து செய்யப்பட்டு, ஆன்லைன் இருக்கை முன்பதிவு வசதிகள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டன.



இதன்படி, பலர் இணையம் ஊடாக ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்வதால் அடுத்த வருடம் கணிசமான எண்ணிக்கையில் சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.