பொருளாதார நெருக்கடி; நாட்டைவிட்டு வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள்..!

நாட்டில் ஏறபட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த வருடம் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பல்கலைக்கழக கற்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.பல்கலைக் கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்த வருடத்தின் முதல் காலப் பகுதியில் சுமார் 6,200 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பில் பணியாற்றினர்.