தேரர் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி; விடுக்கப்பட்ட கோரிக்கை..!

மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி ஹங்குனவேவே தம்மரதன தேரர், சமூக வலைத்தளங்களில் தம்மைப் பற்றி பரவும் காணொளி தொடர்பில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (29) சென்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிய அவர், வீடியோக்களை யார் பகிர்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.அத்தோடு, குறித்த காணொளியை சில காலத்திற்கு முன்னர் அனுப்பிய நபர் ஒருவர் தன்னிடம் ஒரு கோடி ரூபாயை கப்பம் கோரியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதன் போது, தாம் கப்பம் கட்டத் தயாராக இல்லை என்று கூறியதால் அந்த காணொளியை குறித்த நபர் நீக்கிவிட்டதாக தம்மரதன தேரர் கூறியுள்ளார்.