இரு மாணவர்களுடன் விடுதி அறையில் தங்கியிருந்த ஆசிரியை கைது..!

எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம், கல்னாவ கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய இரு மாணவர்களுடன் எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் இந்த ஆசிரியர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்திற்கு வொலிபோல் பயிற்சிக்காக இரண்டு சிறுவர்களையும் அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.பிரசன்னமாகியிருந்ததுடன், ஆசிரியர் சிறுவர்களை எப்பாவல நகரில் தங்குமிடமொன்றில் வைத்திருப்பது தமக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட 51 வயதுடைய விளையாட்டு ஆசிரியர் இன்று (29) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.