பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று (29) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த பரீட்சை ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் என்பனவற்றை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை சகல பரீட்சைக் கொடுப்பனவுகளும் 31ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.