தமிழர் தாயகத்தில் கனடா மாப்பிள்ளையின் திருவிளையாடல்; பிள்ளையுடன் வந்த முதல் மனைவி..!

கனடாவில் வதிவிட உரிமை பெற்ற 24 அகவையுடைய இளைஞனின் திருமணத்தில் சர்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் பதிவு இல்லாத நிலையில் இரண்டு பெண்களுடன் குடும்பமாக வாழ்ந்து விட்டு ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தற்போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த யுவதியினை திருமணம் முடித்ததில் சர்சையான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.கனடாவில் இருந்து டிக்டொக் போன்ற சமூக செயலிகள் ஊடாக அறிமுகமாகி காதலித்து கனடாவில் இருந்து வந்து புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த வாரம் திருமணம் முடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த யுவதி ஒருவருடன் குடும்பமாக வாழ்ந்து குழந்தை ஒன்றும் உள்ள நிலையில் கனடாவிற்கு சென்றுள்ளார்.

அதற்கு முன்னரும் ஒரு பெண்ணுடன் குடும்பமாக வாழ்ந்து விட்டே இராண்டாவது பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.இந்த நிலையில் கனடாவிற்கு சென்று விட்டு மூன்றாவது பெண்ணினை காதலித்துள்ளார் இவர் கைவேலி பகுதியினை சேர்ந்த பெண்.

இந்த நிலையில் ஏற்கனவே திருமணமான பெண் கையில் பிள்ளையுடன் வந்துள்ளார். இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நபர் யுவதிகளை காதல் வயப்படுத்தி குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளமையினை பாதிக்கப்பட்டவர்கள் ஊடாக அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலைக்கு யார் காரணம்..? தமிழர் தாயகத்தில் இவ்வாறு பல பெண்கள் வெளிநாட்டு மோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.