பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் கல்வித் துறையில் பெரும் பாதிப்பு..!

தற்போதைய பொருளாதார நெருக்கடி இலங்கையின் கல்வித் துறையை கடுமையாகப் பாதித்துள்ளதுடன், 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களில் 54.9 வீதமானவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே மேற்படி விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



வெளியிடப்பட்ட அறிக்கையின் படி,

“மேற்படி வயதுக்குட்பட்ட பெண்களின் கல்வியில் நகரப் பகுதியில் 54.2 வீதமும், கிராமப் புறத்தில் 55.1 வீதமும், பெருந்தோட்டப் பகுதியில் 55.1 வீதமும் தடைப்பட்டுள்ளது.

பள்ளிப் பொருட்களை வாங்காமல் அல்லது குறைக்காமல் இருந்ததற்காக 53.2 சதவீதம், சீருடை வாங்காமல் அல்லது குறைக்காமல் இருந்ததற்காக 44.0 சதவீதம், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்ததற்காக 40.6 சதவீதம், ஒன்லைன் வகுப்புகளுக்கு மாறியதற்காக 28.1 சதவீதம், பள்ளிப் பொருட்களை வாங்காமல் அல்லது குறைக்காமல் இருந்ததற்காக. 26.1 சதவீதம் பேர் உந்துதலாக இருப்பதாகவும் அறிக்கை காட்டுகிறது.



அத்துடன், இந்நாட்டில் 17.5 வீதமான பிள்ளைகள் கல்வியை மட்டுப்படுத்தியுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடை நிறுத்தியவர்களின் வீதம் 2.1 வீதமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



மேலும் இது 2023 பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த குடும்ப ஆய்வு என்று பெயரிடப்பட்டுள்ளதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், குடும்ப வருமானம் மற்றும் செலவு, உடல்நலம் மற்றும் குடும்ப அலகுகளின் கடன் ஆகிய ஏழு தலைப்புகளின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.