லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும் சாத்தியம்..!

லிட்ரோ எரிவாயு விலை சூத்திரத்தின் படி, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெறும், ஆனால் இம்முறை எரிவாயு விலை திருத்தம் நாளை (1) காலை முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (31) பிற்பகல் தெரிவித்துள்ளார்.நாளை முதல் VAT வரி அமுலுக்கு வரவுள்ளதால் விலை சூத்திரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும், புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், பண்டிகைக் காலம் காரணமாக இம்மாதம் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக நிறுவனத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.