மீண்டுமொரு தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அதிபர்-ஆசிரியர்கள்..!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டம் நாளைமறுதினம் (20.02.2024) கண்டியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,எஞ்சிய சம்பள உயர்வை வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கம் மூன்றில் ஒரு பங்கு தவணையை வழங்கியிருந்தாலும், மீதமுள்ள தொகையை வழங்குவதற்கான காலத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினால் தற்போது கிடைக்கும் வருமானம் போதவில்லை.

முன்னேறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், எங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கண்டியில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.