மீண்டுமொரு ஈஸ்டரா அல்லது சிவராத்திரியா? அச்சத்தை ஏற்படுத்திய கைதுகள்..!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரங்கேறி 5 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் இன்று காத்தான்குடியில் குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி சிவராத்திரி விழாவும், 31 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த தாக்குதல் மற்றுமொரு பயங்கர தாக்குதலுக்கு அடுத்த புள்ளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அச்சமும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதேவேளை, ஒன்றுகூடல் மைதானத்திலும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் விசேட அதிரடிப் படையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என பலர் வாதிட்டு வந்தாலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியும், தற்கொலைதாரியுமான சஹரானின் அடிப்படைவாதம் மீண்டும் புத்துயிர் பெறுகிறதா எண்ணப்பாட்டிற்குள் பலரை தள்ளியுள்ளது.இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடும் என்ற காட்டமான விமர்சனங்களும் எழுந்துள்ளன.சிவராத்திரி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த சம்பவம் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுகிறதா என்ற கேள்வியையும் அச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.