அடுத்த வருடமும் தற்போதைய அரசாங்கம் அமையும் – ஜனாதிபதி ரணில்

அடுத்த வருடமும் தற்போதைய அரசாங்கம் அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் கிராமத்திற்கு செல்லாவிட்டால் அரசாங்கம் காணாமல் போய்விடும் என தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்திக்காக வழங்கப்படும் பணத்தை கிராமத்திற்கு எடுத்துச் சென்று கிராமத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதேவேளை தற்போதய மக்கள் பிரதிநிதிகள் ஊழல், மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் பரவலாக ஈடுபட்டு வருவதுடன் மக்களைப் புறக்கணித்து மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு மக்களின் ஆதரவை இழந்து வருகின்றனர் எனப் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.