பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அதிக வெப்பநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு மீண்டும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வெளிச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பின்னணியில் சில பாடசாலைகள் அதனை புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் அறிவுறுத்தல்களின்படி மீண்டும் செயற்படுமாறு தெரிவித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதீத வெப்பம் காரணமாக மயங்கிவிழும் சம்பவங்கள் மற்றும் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையிலேயே கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.