நாட்டில் 15 – 29 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களை அதிகம் தாக்கும் எச்.ஐ.வி..!

எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை தேசிய எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகளவில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1700 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.