ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை..!

எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார்.சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து தற்போது, எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.