சஜித் அணியின் எம்.பிக்களை உள்வாங்கும் ரணிலின் முயற்சி வெற்றி..!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சி ஓரளவு வெற்றியளித்துள்ளது எனத் தெரிய வருகின்றது.

குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடையேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் இதுவரை சிலர் மாத்திரமே ஜனாதிபதி ரணிலுக்கான தமது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில், எதிரணி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

சில எம்.பிகள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அண்மைய செயல்பாடுகள் குறித்து அதிருப்தியான மனநிலையில் உள்ளனர்.எதிர்வரும் மே தினத்தை பிரமாண்டமான முறையில் நடத்தி மக்கள் செல்வாக்கை தம்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஐ.தே.க ஈடுபட்டுள்ளது.இந்த விடயம் வெற்றியளித்தால் ரணிலின் செல்வாக்கும் அதிகரிக்கும் என்பதுடன் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும்.