வவுனியாவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மாயம்..!

வவுனியாவில் திருமணமாகி ஒரே மாதத்தில் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில் குறித்த இளம் குடும்பத்தினர் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 12 ஆம் திகதி மனைவியை அவரது பணித் தளத்தில் இறக்கிவிட்டு தான் தனது பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.25 வயதுடைய வில்வராசா ரக்சன் என்பவரே காணாமல் போனவராவார் குறித்த நபரை அடையாளம் காண்பவர்கள் 0741822912 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு மனைவி உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்