யாழில் சட்டவிரோத கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண் கைது..!

சட்டவிரோத கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் இன்று புதன்கிழமை(17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் தெற்கு பூதராயர் கோயிலடியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரின் சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன் போது சந்தேகநபரிடமிருந்து பத்தாயிரம் மில்லிலீட்டர் கசிப்பும் அதனை பொதி செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.