தொடரும் வடக்குக் கல்வியின் அவலம்; கடமை நேரத்தில் உயரதிகாரி தூக்கம்..!

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் அலுவலக நேரத்தில் நித்திரை கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வட மாகாண கல்வியில் பொருட்கொள்வனவு, வாகனப் பயன்பாடு, ஆளணி வளப் பகிர்வு, இடமாற்றங்கள், அரச நிதிப் பயன்பாடு போன்றவற்றில் ஊழல், மோசடிகள், பழிவாங்கல்கள் என பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இவ்வாறு உயர் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் கடமை நேரத்தில் படுத்து உறங்குவது அம்பலமாகியுள்ளது.இத்தகைய வினைத்திறன் குறைந்த அதிகாரிகளை அரசியலமைப்பின் 55(4) இன் படி உருவாக்கப்பட்ட தாபனவிதிக் கோவையின் தொகுதி 2 இன் XLVIIIஆம் அத்தியாயத்தின் உபபிரிவுகளான 31.1.2, 31.1.10, 31.1.13, 31.1.15 ஆகிய தவறினைச் செய்துள்ளதாக கருதியும் அரச திறைசேரியின் சுற்று நிரூபங்களை மீறி அரச நிதியினை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் கருதியும், குறித்த அலுவலர் வினைத்திறனற்ற வகையில் கடமை புரிந்துள்ளதாகவும் கருதியும் குறித்த அலுவலரை கட்டாய ஓய்வில் உடன் அனுப்புமாறு கெளரவ ஆளுநர் மற்றும் உத்தம ஜனாதிபதியிடம் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இவ்வாறு வடக்கின் கல்வி உயர் அதிகாரிகள் கடமை நேரத்தில் தூங்கினால் வடக்கு கல்வியும் தொடர்ச்சியாக ஒன்பது மாகாணங்களில் ஒன்பதாவதாக தொடர் தூக்கத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.