வவுனியாவில் இளைஞர் ஒருவர் ஹெரோயினுடன் கைது..!

வவுனியா – ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஏ – 9 வீதி ஓமந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவரை வழிமறித்துச் சோதனை செய்தனர்.இதன்போது இளைஞர் ஒருவரின் உடைமையில் இருந்து 6 கிராம் ஹெரோயின போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இதையடுத்து மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டார்.மேலதிக விசாரணைகளின் பின் அந்த இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.