டயானாவின் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்; வர்த்தமானி வெளியானது..!

டயானா கமகேவின் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்திருந்தது.இந்நிலையில், டயானா கமகே நாடாளுமன்றத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் பெயரிடப்பட்டுள்ளார்.