பரீட்சை முடிந்து வீடு திரும்பி மாணவியை கடத்திய மர்ம கும்பல்..!

சாதரண தர பரீட்சை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த வந்ததாக கூறப்படும் வான் மற்றும் நான்கு இளைஞர்களை அலதெனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாதரண தர பரீட்சைக்கு இன்றைய தினம் (15) தோற்றி விட்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த கும்பல் மாணவியை கடத்த முயன்றுள்ளனர்.அப்போது, ​​அவருடன் இருந்த மேலும் இரு மாணவிகள் அதைத் தடுக்க முயன்ற போது அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.அதனை தொடர்து, அவசர அழைப்பொன்றை பெற்றுக்கொண்ட அலதெனிய காவல் நிலைய கட்டளைத் தளபதி பிரதான காவல்துறை பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட காவல்துறை குழுவினர் வானை துரத்திச் சென்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதோடு மாணவியையும் மீட்டுள்ளனர்.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.