முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள மன்னிப்புச் சபையின் செயலாளர்..!

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard இன்று (16) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard-இன் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.Agnès Callamard எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.