மைத்திரியின் அதிரடி – தயாசிறியின் சு.க பொதுச் செயலாளர் பதவி பறிப்பு..!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார்.

அவரது வெற்றிடத்துக்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார்.சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் காய்நகர்த்தலை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே, தயாசிறி ஜயசேகரவின் பதவியை மைத்திரிபால பறித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விலகியதன் காரணமாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.