மாணவியான சிறுமி துஷ்பிரயோகம்; 12 வயதான மாணவன் கைது..!

கம்பஹா, பல்லேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பன்னிரெண்டு வயது மாணவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஐந்து மாணவர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பாடசாலை நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாணவியின் தாயார் மேற்கு காவல் நிலையத்தின் வடக்கு பிரிவு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக பதவி வகிக்கும் காவல்துறை பரிசோதகர் எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

12 வயதுடைய இந்த மாணவன் பாடசாலை மைதானத்தில் உள்ள கழிவறைக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது குறித்த மாணவன் பாடசாலையில் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தமை தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.இந்த பாரதூரமான சம்பவத்தை மறைக்க ஆசிரியை ஒருவர் கடுமையாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. காவல்துறை பொறுப்பதிகாரியாக உள்ள மாணவியின் தாயாரை இந்த ஆசிரியை பலமுறை கைத்தொலைபேசியில் அழைத்து இந்த சம்பவத்தை மேற்கொண்டு நடத்த வேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *