தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம்; இராஜாங்க அமைச்சு அறிவிப்பு..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, தேர்தல் சட்டத்திற்கு அமைவாக அரச பணியாளர்கள் 3000 பேர் வரையில் பணியிடங்களில் இருந்து சம்பளமில்லாத விடுமுறையை பெற்றிருந்தனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000 க்கும் மேற்பட்ட அரச பணியாளருக்கு தம்மால் எவ்விதமான நிவாரணக் கொடுப்பனவுகளும் வழங்க முடியாது தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.இதனால் வேதனமல்லா விடுமுறையில் சென்ற, தேர்தலில் போட்டியிடும் இந்த வேட்பாளர்களில் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.