சட்டம், ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை – ரணில்

தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை நாட்டின் சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் விமானப்படை முகாமில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்களால் பாராளுமன்றத்தை கையகப்படுத்துவதைத் தடுத்து நாடு அராஜகமாக மாறுவதைத் தடுத்த பாதுகாப்புப் படையினருக்கு இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.