யாழில் தொடரும் அவலம்; 14 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு..!

14 வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்னர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப் பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தியமை நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்ததுள்ளதுபாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.