சாரதிகள் புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டத்தில்; பல ரயில் சேவைகள் இரத்து..!

புத்தாண்டு விடுமுறையில் இருந்த சில சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று (16) காலை முதல் 30க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதன் காரணமாக புத்தாண்டுக்கு கிராமங்களுக்கு சென்று திரும்புபவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.