தாயகத்தில் பெரும் சோகம்; மகளை தேடிவந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளைத் தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட திருவா கந்தையா என்ற மகளை தேடிவந்த இந்த தந்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் போராட்டங்களிலும் பங்கேற்றிருந்தார்.இவ்வாறு தமது உறவுகளை தேடி அலையும் பலர் நோய் வாய்ப்பட்டும், வயது மூப்பாலும் தொடர்ச்சியாக உயிரிழக்கின்ற போதும் உரிய நீதி இதுவரைக் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.