உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நடைபெறுமா??? – கல்வி அமைச்சர் சுசில்

2022 ஆம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் பங்கேற்பது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விரைவில் சாதகமான முடிவெடுப்பார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் (ஏப்ரல் 18) கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரேமஜயந்த, பல்கலைக்கழக பேராசிரியர்களின் விடைத்தாள் திருத்தும் கொடுப்பனவு அவர்களின் கோரிக்கைகளை அடுத்து 90% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.



“உதாரணமாக, ஒருவர் முன்னர் 50,000 பெற்றிருந்தால் தற்போது ரூ. 105,000,” பெறமுடியும் என்று அமைச்சர் விளக்கினார், விடைத்தாள் திருத்தும் செயல்முறைக்காக ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் கொடுப்பனவுகளுக்காக 400 மில்லியனை அதிகரிக்க திறைசேரி ஒப்புக் கொண்டுள்ளது.



இதனால், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற் சங்கங்கள் இந்த விடயத்தில் சாதகமான தீர்மானத்தை எட்டியுள்ள நிலையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த தீர்மானத்திற்கு இணங்கி, விடைத்தாள் திருத்தும் பணியை விரைவில் ஆரம்பிக்குமாறும் பிரேமஜயந்த வேண்டுகோள் விடுத்தார்.