சுவிஸ் இளம் குடும்பஸ்தரால் கிளிநொச்சியில் தாயான பாடசாலை மாணவி..!

சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவர் 16 வயது கிளிநொச்சி சிறுமியை தாயாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது.

யாழ் தீவகப்பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர், கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியாவை சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவரை திருமணம் முடித்து சுவிஸ்லாந்துக்கு சென்றதாக கூறப்படுகின்றது.அங்கு சென்ற பின்னர் வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட சில பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அப்படி அவர் உதவி செய்த கிளிநொச்யை சேர்ந்த பிரபல பாடசாலையில் படித்து வந்த 16 வயதான மாணவி சில மாதங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது மாணவியின் குடும்பம் கிளிநொச்சியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளளார்கள்.

இது தொடர்பாக மாணவியின் வகுப்பாசிரியர் மாணவியின் நண்பிகள் மற்றும் உறவினர்களை விசாரித்து மாணவியும் குடும்பமும் இருந்த இடத்தை ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார்.அதன்போதே யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடு ஒன்றில் கைக்குழந்தையுடன் 16 வயதான மாணவி வாழ்ந்து வந்தமை கண்டறியப்பட்டது. தாயாரிடம் ஆசிரியர் மேற்கொண்ட விசாரணையின் போதே சுவிஸ்வாழ் குடும்பஸ்தரின் திருவிளையாடல் வெளியாகியுள்ளது.

அக் குடும்பத்திற்கு உதவி செய்வதாக கூறி வீட்டுக்கு காரில் சென்று வந்த நபர் மாணவியை பல தடவைகள் வெளியே அழைத்துச் சென்றதாக கூறி தாயார் , சுவிஸ் குடும்பஸ்தர் சென்ற பின்னரே மாணவியின் கர்ப்பம் தனக்கு தெரியவந்ததாகவும் கூறியுள்ளாராம்.குறித்த மாணவி நன்றாக படித்து வந்தவர் இந்த வருடம் ஓ.எல் பரீட்சை எடுக்க இருந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இறுதி யுத்தம் முடியும் தறுவாயில் தனது கணவனை இழந்த அந்த தாயார் மிகவும் கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவந்த நிலையில் உதவி செய்கிறேன் என வந்த சுவிஸ்வாழ் குடும்பஸ்தரால் மாணவி சீரழிந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.