ரமழான் பண்டிகையை கொண்டாட வந்த சிறுமியான பேத்தி துஸ்பிரயோகம்; தாத்தா கைது..!

தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர கடந்த 23ஆம் திகதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சிறுமி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சகோதரன் மற்றும் தந்தையுடன் கல்லொலுவ பிரதேசத்தில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கு ரமழான் பண்டிகையை கொண்டாட வந்ததாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி இரவு வீட்டின் அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த ஆச்சி (சந்தேக நபரின் மனைவி) அறைக்குள் சென்று சிறுமியை காப்பாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை காவல்நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொ. ப. சந்தன குலசூரிய, எம். கே. ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என சார்ஜன்ட் சுதத் நந்தசிறி (38098) நீதிமன்றத்தில் தெரிவித்தார்