பொலிஸ் அதிகாரியினால் நடத்தப்பட்ட விபசார விடுதி சுற்றி வளைப்பு; 6 யுவதிகள் கைது..!

தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி, ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து நான்கு ஆண்களுடன் விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆறு யுவதிகளையும் கைது செய்ததாக குருணாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குருணாகல், கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, ஐஸ் மற்றும் கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.விபசாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்தப் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.