விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க விரிவுரையாளர்கள் இணக்கம்..!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடத் தயாரென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்த எதிர்ப்பார்த்துள்ள கலந்துரையாடலை அடுத்த வாரம் ஒழுங்கு செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய அண்மையில் தெரிவித்தார்.இந்த நிலையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.