தனியார் – அரச பேரூந்துகளுக்கிடையில் மோதல்; ஒருவர் வைத்திய சாலையில் அனுமதி..!

நேற்றைய தினம் ( 06.05.2023 ) இ.போ.ச வவுனியா சாலைக்குரிய பேரூந்து பருத்தித்துறை நோக்கி பயணிக்க இருந்த வேளை வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் சுமார் மாலை 16.35 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்துக்குரிய தனியார் பேரூந்து உரிமையாளர் இ .போ .ச வவுனியா சாலை பேரூந்தில் ஏறி காப்பாளரை தாக்கியுள்ளார்.இதன் காரணமாக காப்பாளர் கடுமையாக தாக்கப்பட்டதனால் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக.தியாகராஜா என்ற காப்பாளர் அனுமதிக்கப்பட்டார் என இ .போ .ச வவுனியா சாலை செய்திகள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *