யாழில் மாணவர்களின் உணவுக்காக ஒதுக்கிய நிதியை சுருட்டிய பாடசாலை அதிபர்..!

யாழ் தீவக வலயத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சத்துணவு திட்ட நிதியை பாடசாலையின் அதிபர் மோசடியான வழியில் கையாடல் செய்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதியநேர சத்துணவுத் திட்ட நிதியை இன்னொருவரின் பெயரில் காசோலை எழுதி பாடசாலையின் அதிபர் கையகப்படுத்தியுள்ளார்.பாடசாலைக்காக புலம்பெயர் மக்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் நிதியில் மதியநேர உணவை வழங்கிவிட்டு அதனை அரசாங்கத்தின் நிதியில் வழங்கியதாகக் கணக்கு காட்டி சுமார் 3 இலட்சம் ரூபா நிதியை அதிபர் கையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகின்றது.மேலும் மாணவர்களின் பணத்தை கையாடல் செய்த அதிபரை விசாரணை முடியும் வரை தற்காலிகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.