வவுனியா தவசிகுளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் 24 வயது மதிக்கத்தக்க அதே பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இதேவேளை தவசிகுளம் பகுதியில் அண்மைக் காலத்தில் குழு மோதல்கள், போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள போதும் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


Recent Comments