ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட சர்வதேச சமூகத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற செயல்முறைகளையும் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலைப் பின்பற்றுவதற்கான தமது உறுதி மொழியை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் ஜனநாயகம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் “கணிசமான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Recent Comments