Saturday, January 24, 2026
Huisதாயகம்மன்னாரில் தாக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் கைது செய்ய நடவடிக்கை..!

மன்னாரில் தாக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் கைது செய்ய நடவடிக்கை..!

மன்னாரில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை பொலிசார் கொடூரமாக தக்கிய நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பொது மக்கள் அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பொலிசார் தங்கள் மீது உள்ள குற்றத்தை மறைக்கும் விதமாக பொதுமக்கள் மீது பல்வேறு விதமான பொய்யான வழக்குகளை தொடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும் போராட்டத்தில் முன்னின்று செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற போராட்டத்தில் அராஜகமாக மக்களை தாக்கியது மாத்திரம் இல்லாமல் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் பொலிசார் மேற்கொண்டுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் அமைதியான மக்கள் போராட்டத்தில் பெண்கள் மதகுருக்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தக்குதலை மேற்கொண்ட பொலிசார் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை போராட்டகுழு முன்னெடுக்கவுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் முறைப்பாட்டு பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருப்பினும் எதிர்வரும் கிழமைகளில் நடந்த அனைத்தையும் மறந்து எம்மவர்கள் பலர் தள்ளாடி கன்ரீனில் நட்பு பாராட்டியபடி மஹதயா கொந்தம ரசாய் என்றபடி கொத்தும், றைசும் உண்டபடி இருப்பார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!