மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிசாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (26) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி வைத்தனர்.
மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
“மன்னாரில் கடந்த 56 நாட்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த அரசு மக்களுக்கு விரோதமான முறையில் காட்டு மிராண்டித்தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
Recent Comments