இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 36 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் அடைக்கக்கூடிய சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 36,000 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சட்டங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச சமூக ஆர்வலர்களின் செயற்பாட்டால் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கைகள் கடுமையாகக் கட்டப்பட்டு வரும் நிலையில் இத்தகைய அதிகரிப்பை தவிர்க்க முடியாது.


Recent Comments