நான்கு அமைச்சர்கள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் பிரித்தானியாவுக்கு பயணம் செய்த போது, அவர்களுக்கு சிக்கன வகுப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தும், அவர்கள் இரகசியமாக வணிக வகுப்பில் பயணித்ததாக குற்ற்ச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்றைய தினம்(10) வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தச் சம்பவம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் செயல் என்று குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுஜீவ சேனசிங்கவின் கூற்றுப்படி, அவர்கள் முதலில் சிக்கன வகுப்புப் பிரிவில் அமர்ந்திருந்தனர்.
ஆனால், விமானத்தின் உட்புற விளக்குகள் அணைக்கப்பட்டவுடன், அவர்கள் “பேய்களைப் போல இரகசியமான முறையில்” வணிக வகுப்புக்குச் சென்று அங்குள்ள இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிறுவனத்தில், உரிய அனுமதிச் சீட்டு இன்றி இவ்வாறு அதிகச் செலவுள்ள வகுப்பில் பயணித்தது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.


Recent Comments