கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவாஜதீவு கிராம சேவகர் பிரிவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – சமாவாஜதீவு பிரதேசத்தைச் சேர்ந்த, 28 வயதான சு. பர்சாத் என்பவர், நவம்பர் 28ஆம் திகதி, அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வாளால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கிண்ணியா – 6, சமாவாஜ தீவு பகுதியைச் சேர்ந்த, முகைதீன்வாவா கலீமுள்ளா (வயது 26), அப்துல் அஜீஸ் அஸீம்(வயது 19) ஆகிய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொலை குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இன்றைய தினம் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Recent Comments